search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்காலிகமாக ஒத்திவைப்பு"

    • கட்டையன் யானையை பிடிக்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • யானை நடமாட்டத்தை வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதி யில் ஊருக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதம் செய்த கட்டையன் யானையை வனத் துறையினர் பிடித்து பவானி சாகர் வனச்ச ரகத்தில் உள்ள மங்கள ப்பட்டி வனப்பகுதி யில் விட்டனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வனப்பகுதியில் விட்ட கட்டையன் யானை பவானி சாகர் அணை நீர் தேக்கத்தை ஒட்டியுள்ள சித்தன் குட்டை, அய்ய ம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பகல் நேர த்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது.

    ஊருக்குள் நுழைந்த யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கிராம மக்கள் விடுத்த கோரிக்கை யை ஏற்று வனத்துறையினர் கட்டையன் யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் இருந்து கபில்தேவ் மற்றும் முத்து ஆகிய 2 கும்கி யானைகளை அழைத்து வந்தனர்.

    வனத்துறை ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வனப்பகுதியில் முகாமிட்டு யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் யானை அடர்ந்த வனப்ப குதிக்குள் சென்று விட்ட தால் கட்டையன் யானையை பிடிக்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படு வதாகவும், கட்டையன் யானையை பிடிக்க கொண்டுவரப்பட்ட 2 கும்கி யானைகளும் மீண்டும் ஆனைமலை புலி கள் காப்பகம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவி த்தனர்.

    இருப்பினும் கட்டை யன் யானை நடமாட்டத்தை வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×